திருச்சி வடக்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்த பரணிதரன் (23) என்பவரை, பழைய பால்பண்ணை பகுதியைச் சேர்ந்த முகமது சபீர் (19) மற்றும் அவரது நண்பர்கள் மரக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பெண்ணை கேலி செய்த விவகாரம் தொடர்பாக முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளது. தலையில் காயமடைந்த பரணிதரன் அளித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் முகமது சபீர் மற்றும் ராகவேந்தர் (19) ஆகியோரை கைது செய்தனர்.