திருச்சி சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகிழம்பாடி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருமண ஆசை கூறி பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக வீ. துறையூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று முன்தினம் (மே 25) தீர்ப்பளித்த போக்ஸோ நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா, குற்றவாளி பாலசுப்ரமணியனுக்கு ஆயுள் தண்டனையும் 15,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.