திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர் மாணவி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாணவிகள் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் ஆட்சியர் உறுதி அளித்தார். இதன் அடிப்படையில், மாணவிகள் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைத்தனர்.