திருச்சி: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தேர்தல் அறிக்கை வெளியிட்டது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு, 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மாநிலத் தலைவர் முகமது ஹனிபா கூறுகையில், தமிழ்நாடு ஒழுக்கம், நீதி, சம சீரான வளர்ச்சி மற்றும் சுகாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டும். புதிய அரசு ஊழல் மற்றும் மது போதை இல்லாததாக இருக்க வேண்டும். மின் கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்கும் முறையை கொண்டு வந்து, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கட்டண சுமைகளை குறைக்க வேண்டும். ஊழலை ஒழிக்க கொண்டுவரப்பட்ட லோக் ஆயுக்த அமைப்பின் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி