திருச்சி: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

மதுரை கோட்டத்தில் ரயில் பாதையில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி- ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ், குருவாயூர்- சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் கன்னியாகுமரி- ஐதராபாத் சிறப்பு ரயில்கள் வருகிற 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மாற்றுப் பாதையில் இயக்கப்படும். சில ரயில்கள் வழக்கமான பாதையில் செல்லாது என்றும், சில நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும் என்றும் திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி