திருச்சி: திருமாவளவனுக்காக ரூ. 9 லட்சம் வாடகையில் ஹெலிகாப்டர்

திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற உள்ள மதசார்பின்மை பேரணியில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மீது வானிலிருந்து பூக்களை தூவ ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 5 நிமிடங்கள் பூக்களை தூவுவதற்கான ஹெலிகாப்டர் வாடகையாக ரூ. 9 லட்சம் செலவிடப்பட்டிருப்பது விவாத பொருளாக மாறி இருக்கிறது. 

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில் இன்று திருச்சியில் விசிக சார்பாக மதச்சார்பின்மை காப்போம் பேரணி நடக்கவுள்ளது. மாலை 4 மணியளவில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அருகே தொடங்கும் இந்த பேரணி மாநகராட்சி அலுவலகம் அருகில் முடிவடைய உள்ளது.

தொடர்புடைய செய்தி