திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி கருப்பாயி வயது 60 பைல்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட அதற்கு தொடர் சிகிச்சை எடுத்து வந்தும் கடுமையான வலி குறையாததால் மன உளைச்சலில் இருந்த அவர் கடந்த ஆறாம் தேதி அன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதையடுத்து உறவினர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் இது குறித்து தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.