திருச்சி கிராப்பட்டியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்: அதிமுக - பா.ஜ.க கூட்டணியில் இருந்து பல கட்சிகள் எங்களோடு கூட்டணி சேர காத்திருக்கின்றனர். இதுவரை அவர்களால் அவர்கள் கூட்டணியை இறுதிப்படுத்த முடியவில்லை.
எங்கள் கூட்டணியில் இருந்து கட்சிகளை இணைக்கும் முயற்சியில் நயினார் நாகேந்திரன் ஈடுபடுகிறார். அவர் கொக்கிப்பார்க்கிறார். எங்கள் கூட்டணியில் இருந்து யாரும் வெளியேற மாட்டார்கள் எனப் பேசினார்.