லால்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மணக்கால் பகுதியைச் சேர்ந்த ஆர். ரவீந்திரகுமார் (25) என்பவரை, பக்கத்து வீட்டைச் சேர்ந்த என். கமலேஷ் (23) முன்விரோத தகராறு காரணமாக கடந்த ஜனவரி 5-ஆம் தேதி அரிவாளால் வெட்டிக் கொன்றார். இதுகுறித்து லால்குடி போலீஸார் வழக்குப்பதிந்து கமலேஷை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து கமலேஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எஸ். பி. செ. செல்வநாகரத்தினம் பரிந்துரைத்தார். இதன்பேரில், மாவட்ட ஆட்சியர் சரவணன் அளித்த உத்தரவு நகல் சிறையிலுள்ள குற்றவாளியிடம் ஒப்படைக்கப்பட்டது.