திருச்சி இலஞ்சம் பெற்ற விஏஓ இரண்டு ஆண்டு சிறை தண்டனை

மணப்பாறை குமாரவாடி கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி கருப்பன் என்பவரின் சொத்துக்களை பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கியதாக, அப்போதைய கிராம நிர்வாக அலுவலர் சாமிக்கண்ணு மீது ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி புவியரசு, குற்றவாளி சாமிக்கண்ணுவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு சொத்து பரிமாற்றங்களில் லஞ்சம் வாங்குவோருக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி