திருச்சி மாவட்டம் முசிறி அருகே எம். புதுப்பட்டியைச் சேர்ந்த செல்லதுரைக்கு இலவச மின் இணைப்பு வழங்க 3000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கிராம நிர்வாக அலுவலர் முரளதரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கையால் கைது செய்யப்பட்ட முரளதரனுக்கு, வழக்கு விசாரணை முடிந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.