திருச்சி மது ஒழிப்பு மக்கள் இயக்கம் செய்தியாளர் சந்திப்பு

மது மறுப்பு மக்கள் இயக்கத்தின் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரஸ் கிளப்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறறது. மிஇந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் பேசியபோது தமிழக முழுவதும் மது ஒழிப்பை முன்னெடுக்கும் வகையில் மது மறுப்பு மக்கள் இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய மற்றும் மாநில அரசு மது ஒழிப்புக்கு முன்னெடுப்பு வேண்டும், மதுவை அகற்றுவதற்கான அதிகாரத்தை ஒன்றிய அரசு தனது கையில் வைத்துள்ளது. ஒன்றிய அரசு உடனடியாக முதலமைச்சர் மாநாட்டை கூட்டி மது அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசை நடத்துவதற்கு பணம் இல்லாததால் மது விற்பனையை நடத்துவதாக முதலமைச்சர் தெரிவிக்கின்றனர்.
எனவே, ஒன்றிய அரசு மாநில அரசிற்கு இழப்பு ஏற்படுத்தும் நிதி தொடர்பாக நிதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாநிலங்களில் மதுவை ஒழிக்க ஒருங்கிணைந்த திட்டத்தை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் சுமார் 40 கிராமங்கள் மதுவிலிருந்து முழுமையாக விடுபட்டுள்ளதாக ஆய்வில் தெரிய உள்ளது. அதற்கான அரசும் விருதுகள் வழங்கியுள்ளது. தமிழக அரசும், மதுவிலக்கு காவல்துறைகளும் ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.

தொடர்புடைய செய்தி