திருச்சி மாநகரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் துறையூர் மதுவிலக்கு அமலாக்க காவல் நிலைய ஆய்வாளர் கதிரவன் தலைமையிலான போலீசார் திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ராம்ஜி நகர் மலைபட்டியை சேர்ந்த பாக்கியலட்சுமி, நளினி, கிருஷ்ணவேணி, ரேவதி, லதா ஆகிய ஐந்து பெண்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏழு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.