மத்திய அரசு தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சி. ஐ. டி. யு. திருச்சி, கரூர் மண்டலம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருச்சி | கரூர் மண்டல தலைவர் சிங்கராயன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மண்டல பொதுச்செயலாளர் மாணிக்கம், துணை பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ். ரெங்கராஜன், மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.