துறையூர்: வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

பெரம்பலூரில் இருந்து திருமண கோஷ்டியினரை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று துறையூர் அருகே உள்ள கொப்பம்பட்டி நோக்கிச் சென்றது. வேன் துறையூரில் உள்ள திருச்சி சாலை பாலக்கரை திருப்பம் அருகே வந்தபோது பயணிகள் பொருட்கள் வாங்க வேண்டும் என சாலை ஓரத்தில் நிறுத்த கூறியுள்ளனர். ஓட்டுநர் சாலையோரம் வேனை நிறுத்த முயன்றபோது சாலையில் வெட்டப்பட்டிருந்த குழியில் வேன் சரிந்து விபத்துக்குள்ளானது. 

இதில் பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பினர். துறையூர் நகரில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகத்திற்காக சாலையோரம் பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகின்றன அவ்வாறு தோண்டப்பட்ட பள்ளத்தில் வேன் சரிந்து விழுந்ததால் விபத்து நேர்ந்தது. இதனால் துறையூர் திருச்சி சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி