இரண்டு மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தைக் கேட்டு இருவரும் தரம் சர்மாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 21.9.23 அன்று ஏற்பட்ட தகராறில் இருவரும் சேர்ந்து தரம் சர்மாவை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சச்சின் என்கிற சச்சின் குமார் ஒரு மாதத்திற்கு முன் கைதான நிலையில் மற்றொரு குற்றவாளியான சிண்டு என்கிற சொட்டு ஜார்கண்ட் மாநிலத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் சிண்டு என்கிற சொட்டு ரயிலில் சேலம் வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சேலம் ரயில் நிலையத்தில் வைத்து அவரை துறையூர் போலீசார் கைது செய்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி