லாரியை பொள்ளாச்சியைச் சேர்ந்த மணிகண்டன் ஓட்டி வந்தார். நள்ளிரவு மூன்று மணி அளவில் லாரி துறையூர் பைபாஸ் சாலை சொரத்தூர் ரவுண்டானா அருகே வந்தபோது ஓட்டுநர் கண் அயர்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லாரி ஓட்டுநர் நல்வாய்ப்பாக காயம் இன்றி உயிர் தப்பினார். லாரியின் டீசல் டேங்க் உடைந்து சாலையில் டீசல் ஆறாக ஓடியது. சென்டர் மீடியனில் கோழித் தீவனம் ஏற்றி வந்த லாரி மோதியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.