துறையூர்: பணி நியமன ஆணை வழங்குதல்

திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியும் கோவை டெக்ஸ்மோ அக்குவாசப் நிறுவனமும் இணைந்து "கல்லூரி வளாகத்தில் இருந்து தொழில் வாழ்க்கை வரை" என்ற தலைப்பில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு பாடப்பிரிவுகளை சார்ந்த 77 மாணவர்களுக்கான பணி நியமன ஆணையினை கல்லூரி தலைவர் பொன். பாலசுப்பிரமணியன் மற்றும் டெக்ஸ்மோ அக்குவாசப் நிறுவனத்தின் துணைத் தலைவர் நரேந்திரன் வழங்கினார்கள். 

இந்நிகழ்ச்சியில் டெக்ஸ்மோ அக்குவாசப் நிறுவனத்தின் துணைத் தலைவர் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் பொன். பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அவரது தலைமை உரையில் மாணவர்களின் சாதனையையும் அதில் பெற்றோர்களின் ஒத்துழைப்பையும் பாராட்டி பேசினார். மேலும் இந்நிகழ்வில் கல்லூரி செயலர் பொன். இரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். 

கல்லூரியின் பொறுப்பு முதல்வர் மற்றும் ஐக்யூஏசி ஒருங்கிணைப்பாளர் முனைவர். சரவணன் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவின் இணை புலத் தலைவர் முனைவர். கஸ்தூரி வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில், முனைவர் பூபதிராஜா நன்றி கூறினார். முதுநிலை இரண்டாம் ஆண்டு வேதியியல் மாணவிகள் தீபிகா மற்றும் புனிதா ஆகியோர் இவ்விழாவினை தொகுத்து வழங்கினர்.

தொடர்புடைய செய்தி