மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் திரைப்படம் இன்று (ஜூன் 13) உலகம் முழுவதும் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து துறையூரில் படைத்தலைவன் ரிலீஸ் ஆன திரையரங்கம் முன்பாக தேமுதிக திருச்சி மாவட்ட செயலாளர் கே எஸ் குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை, நகர செயலாளர் சங்கர் முன்னிலையில் தேமுதிக தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.