துறையூர் அருகே நாகநல்லூரில் குமரவேல் என்பவரது பைக் திருடு போனது. இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் உதவியுடன் புத்தனாம்பட்டியைச் சேர்ந்த கோபியை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில், சாத்தனூரைச் சேர்ந்த பிரகாஷ், ஆங்கியத்தைச் சேர்ந்த அஜித், கிரி ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.