திருச்சி முக்கொம்பு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். விற்பனை நோக்கத்திற்காக குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்ததையடுத்து, காரில் இருந்த முசிறியைச் சேர்ந்த சாகுல்ஹமீது, துடையூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், சிறுகாம்பரைச் சேர்ந்த சிவச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 30 கிலோ குட்கா பொருட்கள், ஒரு கார், மூன்று செல்போன்கள் மற்றும் 8000 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.