துறையூர் அருகே கோவில் உண்டியல் திருட்டு

துறையூர் அருகே செங்காட்டுப்பட்டி மாரியம்மன் கோவிலில் உண்டியலை திருடிச் சென்ற மர்ம நபர்கள், அதிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியலை அருகிலிருந்த புதரில் வீசிச் சென்றனர். இதுகுறித்து கோவில் பூசாரி அளித்த புகாரின் பேரில், துறையூர் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடப்பட்ட பணம் மற்றும் குற்றவாளிகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி