திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளரிடம் டாஸ்மாக் பணியாளர்கள் மனு அளித்தனர். அதில், திருச்சியில் டாஸ்மாக் மதுபான கடைகளை இரவு 10 மணிக்குள் மூட வேண்டும் என்ற தமிழக அரசின் புதிய உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்த புதிய உத்தரவால் டாஸ்மாக் பணியாளர்களின் பணி பாதிப்பு ஏற்படும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.