துறையூர் அருகே புத்தனாம்பட்டி தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த முகாம் மக்களின் தேவைகளை நேரடியாக அறிந்து தீர்வு காணும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.