சமயபுரம்: கள்ளச்சந்தையில் சரக்கு விற்பனை வீடியோ வைரல்

திருச்சி சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் இரண்டு மதுபான கடைகள் இருக்கின்றன. இரண்டு மதுபான கடைகள் மதியம் 12 மணிக்கு மேல் தான் திறக்கப்படும். ஆனால் வெட்ட வெளிச்சமாக அதிகாலை ஒரு தள்ளுவண்டி கடையில் வைத்துக் கொண்டு ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு 100 ரூபாய் வரை அதிகம் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. 

வயதான பெண்கள் மட்டும் அல்லாமல் ஆண்கள் எனப் பலரும் வரிசை கட்டி மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். இந்த வீடியோ தற்போது இப்பகுதியில் வைரல் ஆகி வருகிறது. இச்சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி