திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மன் திருக்கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு மூன்றாம் ஆண்டு ஏகாதச ருத்ர மகா யெஞ்ஞம் விழா நேற்று மார்ச் 1 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் மங்கல இசை, அணுக்ஞை, தனபூஜையுடன் விழா துவங்கியது. இன்று காலை நந்தி கொடியேற்றுதல், கோ பூஜை, கலச பூஜை, வசோர்தர பூர்ணாகுதி, ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மனுக்கு கலசபிஷேகம், மகாதீபாராதனை, மாதேஸ்வர பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. விஸ்வகர்மா கைவினை கலைஞர்கள் அறக்கட்டளை சங்கத்தினர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.