திருச்சி ஜிஎச் முன்பாக இறந்த இளைஞரின் உறவினர்கள் சாலை மறியல்

திருச்சி பீம நகர் காவலர் குடியிருப்பில் இன்று காலை ஒரு இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவத்தில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் மீது எஸ்சி எஸ்டி சட்ட விதிப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும், ஆண் வாரிசு இல்லாததால் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இளைஞரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி