துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த காளிப்பட்டி ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தீனதயாளன், தனக்கு சொந்தமான இடத்தில் வேலி அமைத்துள்ளார். ஆனால், ரவி என்பவர் அந்த இடம் தனக்கு சொந்தமானது என்றும், அனுபவிக்கக் கூடாது என்றும் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், தங்களைக் காப்பாற்றி இடத்தை மீட்டுத் தரக் கோரி தீனதயாளன் குடும்பத்தினர் துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி