திருச்சி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டு சிறை

திருச்சி மாவட்டம் ஜம்புநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த பெருமாள் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். நேற்று (மார்ச் 4) நீதிபதி சண்முகப்பிரியா, குற்றவாளி பெருமாளுக்கு பத்து ஆண்டு சிறை தண்டனையும் 6000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதை உணர்த்துகிறது.

தொடர்புடைய செய்தி