டூவீலர் மீது லாரி மோதி விபத்து ஒருவர் காயம்

முசிறி அருகே உள்ள ஆமூர் மணப்பாளையம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்பரசம்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது இவருக்கு எதிரே வந்த லாரி இவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதில் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சிவானந்தத்திற்கு பின்பக்க தலை முதுகு மற்றும் வலது முழங்கையில் காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து சம்பவம் குறித்து காயம் அடைந்த சிவானந்தத்தின் மனைவி கனிமொழி அளித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரான நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து ஜீயபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி