சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கடந்த 15 நாட்களில் பக்தர்களால் உண்டியல்களில் செலுத்தப்பட்ட காணிக்கைகளை கோயில் இணை ஆணையர் சூரிய நாராயணன் தலைமையில் கணக்கிடும் பணி நடைபெற்றது. இதில் ரொக்கமாக ரூ.1 கோடியே 24 லட்சத்து 37 ஆயிரத்து 775, 01 கிலோ 479 கிராம் தங்கம், 2 கிலோ 181 கிராம் வெள்ளி, 113 அயல்நாட்டு நோட்டுகள் மற்றும் 940 அயல்நாட்டு நாணயங்கள் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக கோவில் இணையானையர் சூரிய நாராயணன் தெரிவித்துள்ளார்.