முசிறி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

முசிறி அருகே உள்ள திருஈகோய்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகள் சஞ்சனா. அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட சஞ்சனா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இதனால் நேற்று (அக் 4 ) வீட்டில் யாரும் இல்லாத வேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சஞ்சனாவின் உடலை மீட்ட தொட்டியம் காவல் நிலைய போலீசார் முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி