பயிற்சியானது ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. வசந்தாதேவி கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பயிற்சியில் துறையூர் வேளாண்மை உதவி இயக்குநர் ரவி முன்னிலை வகித்து முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், மண், நீர் மாதிரிஆய்வு செய்து, உர மேலாண்மைசெய்திடல்,
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பண்ணை காடுகள் பசுமைபோர்வை திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படும் வேம்பு மரக்கன்றுகள் மற்றும் அதற்கு வளர்ப்பிற்க்கான மானியம், மானியத்தில் வழங்கப்படும் உயிர் உரங்கள், ஜிப்சம், நுண்ணூட்ட சத்துக்கள், பற்றி விளக்கம் கூறி பயிற்சி அளித்தார். மேலும் உளுந்து, மக்காச்சோளம், சிறுதானியங்கள், துவரை, நிலக்கடலை சாகுபடி துண்டு பிரசுரங்களை விவசாயிகளுக்கு வழங்கி விளக்கம் அளித்தார்.