துறையூர் அருகே வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த ரம்யா (30) நேற்று (நவம்பர் 6) அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலை எழுந்த ராமராஜ் மனைவியின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.