திருச்சி: சாலை விபத்து; மகன் கண் முன்னே தாய் பலி

மணப்பாறை அருகே உள்ள சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி. இவர் தனது தாய் சண்முகவள்ளியுடன் இருசக்கர வாகனத்தில் ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.கள்ளிக்குடி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோர தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் சண்முகவள்ளி பலத்த காயம் அடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். சின்னதம்பி லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து சம்பவம் குறித்து ராம்ஜி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி