துறையூரில் சமுதாய வளைகாப்பு; தொடங்கி வைத்த எம்எல்ஏ

துறையூரில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் தொடங்கி வைத்தார். 

திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதிகளில் உள்ள 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி துறையூர் திருச்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மலர்மாலை அணிவித்து முகத்தில் சந்தனம் பூசி கைகளில் புதிய வளையல்கள் அணிவித்து ஏழு வகையான உணவுகள் பரிமாறப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஆரத்தி எடுத்து அர்ச்சனை செய்து ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி