திருச்சி உறையூர் மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு நேற்று வெள்ளிக்கிழமை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.