பின்னர் சிறிது நேரம் கழித்து செல்போனை பார்த்த கோமதி, செல்போன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து வீட்டின் கீழ் பகுதிக்கு வந்த கோமதி தனது கணவரின் செல்போனிலிருந்து தன்னுடைய செல் எண்ணிற்கு போன் செய்துள்ளார். அப்பொழுது கோமதியின் வீட்டிற்கு அருகே உள்ள தனியார் நிறுவன அறையிலிருந்து ரிங்டோன் சத்தம் கேட்டுள்ளது. இதனை அடுத்து கோமதி அங்கு சென்று பார்த்தபொழுது மர்ம நபர் ஒருவர் செல்போனிலிருந்து சிம் கார்டை கழட்டுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கோமதி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் செல்போனை திருடிய மர்ம நபரை பிடித்து துறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் செல்போனை திருடிய நபர் பேரூர் கிராமத்தை சேர்ந்த ஜெகதீசன் (40) என்பது தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார் ஜெகதீசனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.