துறையூர் அருகே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சந்திர பிரகாசம், இன்று விடியற்காலை நண்பருடன் புறவழிச் சாலையில் நடைபயிற்சி சென்றபோது, பின்னால் வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.