திருச்சி புத்தூர் ஆபிஸர்ஸ் காலனி பகுதியில் வசிக்கும் மருத்துவர் பாலாஜி வீட்டில் எட்டு சவரன் தங்க நகை காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், மருத்துவரின் வீட்டில் பணிபுரியும் பாண்டியன் என்பவர் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் பாண்டியனை கைது செய்தனர்.