துறையூர் ஆத்தூர் சாலை கோவிந்தபுரம் பிரிவு ரோடு அருகே கரூரிலிருந்து எம்சாண்ட் ஏற்றி வந்த லாரி ஒன்று நிற்பதாக துறையூர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் ஆய்வாளர்கள் சுரேந்திரன், இளவரசி, கிராம நிர்வாக அலுவலர் வசந்தமலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை இட்டபோது லாரியில் அனுமதி இன்றி எம்சாண்ட் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து லாரி ஓட்டுநர் கரூர் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மற்றும் லாரி உரிமையாளர் ஆன கரூர் ஸ்ரீ முருகன் ப்ளூ மெட்டல் கந்தசாமி என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அனுமதி இன்றி நான்கு யூனிட் எம்சாண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.