திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் உள்ள கேண்டீனில் மாணவர்கள் குடித்த குளிர்பானத்தில் பல்லியின் வால் இருந்ததால், ஆறு மாணவர்களுக்கு வாந்தி, குமட்டல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கே. நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.