மணப்பாறை அருகே உள்ள ராயன்பட்டியைச் சேர்ந்தவர் சந்தியாகு இவர் தனது உறவினரான பூலாம்பட்டியைச் சேர்ந்த இன்னாசியம்மாள் என்பவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கடந்த ஆறாம் தேதி அன்று லால்குடி அருகே உள்ள ஆலம்பாக்கம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பைக் சாலையில் இருந்த ஸ்பீட் பிரேக்கரில் ஏறி இறங்கியபோது பின்னால் அமர்ந்திருந்த இன்னாசியம்மாள் தவறி விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார்.
காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்துச் சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.