திருவானைக்காவல் ஆலயத்தில் ஜப்பான் பக்தர்கள் யாகம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சிவஆதினமடம் ஆசான் பாலகும்பமுனி தலைமையில் ஜப்பானைச் சேர்ந்த இந்துபக்தர்கள் 20 பேர் பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்ஸ்தலமாக விளங்கும் திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் வழிபாடு செய்தனர். ஜூன் 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் திருக்கோவிலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உலக நன்மைக்காக ஜப்பானைச் சேர்ந்த பக்தர்கள் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு யாகம் மற்றும் வழிபாடு செய்தனர்.

தொடர்புடைய செய்தி