இவ்விழாவில் இத்திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இவ்விழாவிற்கு மணிகண்டம் ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் அகஸ்டின் இம்மானுவேல் தேவநேசன் மற்றும் முன்னாள் மணிகண்டம் ஒன்றிய பெருந்தலைவர் கமலம் கருப்பையா ஆகியோர் தலைமை வகித்தார்கள்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாரதிதாசன், முன்னாள் துணைத் தலைவர் ரத்தினம், கிராம நிர்வாக அலுவலர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். ரோட்டரி சங்கம் மாவட்ட செயலர் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம் ஆர்.ஐ.டி 3000 ரொட்டரியன் இராமச்சந்திரன் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.