திருச்சி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில், லால்குடி, துறையூர், முசிறி, மணப்பாறை ஆகிய நான்கு இடங்களில் மொத்தம் 1370 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. லால்குடி ஜங்கமராஜபுரத்தில் 217, துறையூர் கோவிந்தபுரத்தில் 321, முசிறி அய்யம்பாளையத்தில் 534, மணப்பாறை கருப்பூரில் 298 மனுக்கள் என மொத்தம் 1370 மனுக்கள் பெறப்பட்டதாக திருச்சி மாவட்ட ஆட்சியரகம் தெரிவித்துள்ளது.