துறையூர் அருகே உள்ள பொண்ணுசங்கம்பட்டியில் சட்டவிரோதமாக பெட்ரோல் டீசல் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பெயரில் ஜம்புநாதபுரம் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது தனபால் என்பவர் உரிய அனுமதி இன்றி சட்டவிரோதமாக பெட்ரோல் டீசல் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அவரிடம் இருந்து 15 லிட்டர் பெட்ரோல் 30 லிட்டர் டீசலை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்