இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது விக்னேஷ் திருச்சி ரெயில்வே நிர்வாகத்தின் சொந்தமான இடத்தில் உள்ள இரும்புகளை திருட முயன்றதாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, போலீசார் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க அழைத்து வந்தனர். அங்கு, வழக்கமான சோதனையின் போது, விக்னேஷின் உள்ளாடையில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து சிறை போலீசார் உடனடியாக கே.கே. நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து கே.கே. நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷிடம் கஞ்சா வந்தது எப்படி? யார் கொடுத்தார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால், இனி சிறைக்கு வரும் அனைத்து கைதிகளையும் தீவிரமாக சோதனை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.