திருச்சியில் இலவச கண் சிகிச்சை முகாம்

திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம், அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் மதுரை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய மாபெரும் கண் சிகிச்சை முகாம். திருச்சியில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை ஐயப்பா சேவா சங்க போசகர் N.V.V. முரளி மற்றும் வழக்கறிஞர் S. சுதர்சன் துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்விற்கு சங்கத் தலைவர் J.J. மகேஷ் தலைமையில் சங்க செயலாளர் C.R. அம்சராம் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் ரமேஷ்பாபு, வரதாச்சாரி, தேவ் சரவணன், மதன், வினோத், வெங்கடேசன், ராமன், சீனிவாசன், வினோத் கண்ணா, கார்த்தி, மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பல நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் பங்கேற்று பயனடைந்தனர்.

தொடர்புடைய செய்தி