தேசிய சட்டப்பணிகள் தினத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சாமிநாதன் தொடங்கி வைத்தார். சட்டப் பணிகள் ஆணை குழு செயலாளர் நீதிபதி பிரபு தலைமை தாங்கினார். நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.